< Back
மாநில செய்திகள்
தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கே.எம்.ஜி. கல்லூரிக்கு தங்கப்பதக்கம்
வேலூர்
மாநில செய்திகள்

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கே.எம்.ஜி. கல்லூரிக்கு தங்கப்பதக்கம்

தினத்தந்தி
|
5 March 2023 12:40 AM IST

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கே.எம்.ஜி. கல்லூரிக்கு தங்கப்பதக்கம்

கே.வி.குப்பம்

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கே.எம்.ஜி. கல்லூரிக்கு தங்கப்பதக்கம்கிடைத்துள்ளது.

சென்னையில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. அதில் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த முதலாமாண்டு உயிர் வேதியியல் மாணவர் ஆர்.குணா 66 கிலோ எடைபிரிவில் தங்கப்பதக்கமும், இளநிலை மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவர் ஏ.நவீன் 83 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், இளநிலை மூன்றாமாண்டு வணிக கணினிபயன்பாட்டியல் துறை மாணவர் வி.லோகேஸ்வரன் 74 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கமும், இளநிலை முதலாமாண்டு வணிக ஆள்முறையியல் துறை மாணவர் வி.நவீன்குமார் 59 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், இளநிலை இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவர் ஆர். சதீஷ்குமார் 93 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

தனிநபர் சாம்பியன் பட்டத்திற்கான கோப்பையை இளநிலை மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவர் ஏ.நவீன் பெற்றார். மேலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வென்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களை கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ், உடற்கல்வி இயக்குனர்கள் ஆர்.ரஞ்சிதம், பி.ஞானக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்