ராமநாதபுரம்
கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கீரனூர் கிராமம்
|கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கீரனூர் கிராமம் உள்ளது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் வீடுகளுக்குள் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை திருட்டு சம்பவம் அவ்வப்பொழுது நடைபெற்று வந்தது. இது குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் குற்றவாளிகள் தற்போது வரை கண்டறிய முடியாமல் போலீசாருக்கு சவால் விடுத்து வந்தனர். இந்த நிலையில் கீரனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி தலைவர் ஜோதி முனியசாமி தனது சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 23 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவை கீரனூர் கிராமம் முழுவதும் அமைத்துள்ளார். இதன் காரணமாக தற்போது கீரனூர் கிராமம் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது கீரனூர் மக்கள் திருட்டு கொள்ளை சம்பவங்களில் இருந்து நிம்மதி அடைந்துள்ளனர். கிராம மக்கள் ஊராட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.