< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"மழலை பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி" - கல்வித் துறை அறிவிப்பு
|6 Oct 2022 2:26 PM IST
மழலை பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 2,381 மழலை பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தற்காலிக ஆசிரியர்களாக 2,381 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பிழைப்பூதியமாக மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு நடத்தும் மழலை பள்ளிகள் கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.