< Back
மாநில செய்திகள்
ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

தினத்தந்தி
|
12 April 2023 9:11 PM IST

ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

வாணியம்பாடி

ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. யு.கே.ஜி. முடித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் செந்தில்குமார் பட்டங்களை வழங்கி, மழலையர் பட்டதாரிகளின் சாதனைகளை பாராட்டினார். கல்வி மற்றும் பாடத்திட்ட செயல்பாடுகள் மூலம் மாணவர்களை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்காக ஆசிரியர்களை பாராட்டினார்

தொடர்ந்து பள்ளி இயக்குனர் ஷபானா பேகம் பேசுகையில், மாணவர்களின் உற்சாகத்தை உயர்த்தவும், அடுத்த கட்டத்திற்கு அவர்களை கொண்டு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தவும், இந்த பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இசை, நடனம் போன்ற சிறு குழந்தைகளின் செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஊட்டி, அவர்கள் வெற்றியின் உச்சத்தைத் தொட உதவுகின்ற வகையில் இந்த பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என கூறினார்.

நிகழ்ச்சியை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹுமேரா பானு மற்றும் ரேஷ்மா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பட்டமளிப்பு விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் சத்யகலா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்