< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மழலையர் பட்டமளிப்பு விழா
|22 April 2023 2:17 AM IST
அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
அம்பை:
அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் மழலையர் பிரிவு மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முன்னாள் முதல்வர் வேலம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குனர் ராஜராஜேஸ்வரி, செயல் இயக்குனர் சிவராஜ் பாண்டியன், பள்ளி முதல்வர் சக்திவேல் முருகன், துணை முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.