< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
மழலையர் பட்டமளிப்பு விழா
|26 March 2023 12:02 AM IST
மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டளிப்பு விழா கலவை சச்சிதானந்த சாமிகள் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகராட்சி தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஆற்காடு கண்ணன் ஸ்வீட் பாஸ்கர், ஆற்காடு தொழிலதிபர் சரவணன், ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் சந்திர மவுலி ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கலவை ரங்கநாதன் பள்ளி முதல்வர் சுகுணா மற்றும் குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் வசந்தி நன்றி கூறினார்.