< Back
மாநில செய்திகள்

திண்டுக்கல்
மாநில செய்திகள்
மழலையர் பட்டமளிப்பு விழா

10 Jan 2023 12:15 AM IST
பழனி அக்சயா பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பழனி அக்சயா அகாடமி பள்ளியில் 30-வது ஆண்டுவிழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். தாளாளர் சுந்தராம்பாள் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் பாலாஜி குமரவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். தொடர்ந்து மழலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியைகள் சவுமியா (மெட்ரிக்), காயத்திரி (சி.பி.எஸ்.இ) மற்றும் பள்ளி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.