கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.309 கோடியில் விரிவாக்கம் பணிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
|கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உலக விபத்து அனுசரிப்பு தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விரிவாக்கம் செய்ய, ஜப்பான் நாட்டு முகமை நிதி உதவியுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 2.80 லட்சம் பரப்பளவில் ரூ. 309 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்களை கொண்டு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த 10 மாதத்தில் விபத்து நேர்ந்தவர்கள் 1,21,174 பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாநில, வெளி நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.