< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிலோ கணக்கில் பிடிபடும் கஞ்சா; முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
|28 April 2024 3:05 PM IST
கஞ்சா வழக்குகளில் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? என காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்கிய சிலர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வந்தன. அப்போது பெரிய அளவில் பிடிபடும் கஞ்சா வழக்குகளில் ஏதாவது ஒன்றில் கஞ்சா விநியோகித்த முக்கிய புள்ளிகள் குறித்து துப்பு துலங்கியுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் கிலோ கணக்கில் பிடிக்கப்படும் கஞ்சா வழக்குகளில் கஞ்சா விநியோகித்த முக்கிய புள்ளிகளின் பெயர்களை சேர்த்துள்ளீர்களா? என காவல்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து வரும் 30-ந்தேதி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.