< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மாதவரம் அருகே திருநங்கை கழுத்தை நெரித்து கொலை
|24 Feb 2023 2:22 PM IST
மாதவரம் அருகே திருநங்கை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சென்னை எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகர், சுனாமி குடியிருப்பு 111-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சனா(வயது 29). இவர் திருநங்கை ஆவார்.
நேற்று காலை மணலி-மாதவரம் நெடுஞ்சாலையில் மாத்தூர் 200 அடி சாலை அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தின் பின்புறம் திருநங்கை சனா, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கொலையான திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.