< Back
மாநில செய்திகள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் விபத்தில் பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் விபத்தில் பலி

தினத்தந்தி
|
18 Feb 2023 12:15 AM IST

மல்லசமுத்திரம் அருகே தனியார் பஸ் மோதியதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் விபத்தில் பலியானாா்.

எலச்சிபாளையம்

மரத்தில் மோதியது

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த பஸ் திருச்செங்கோடு- மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று காலை வந்தது.

அப்போது எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் பயங்கரமாக மோதியது. பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கூத்தாநத்தம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 70) என்பவர் படுகாயம் அடைந்தார்.

சாவு

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் பஸ்சில் முன்பக்க சீட்டில் அமர்ந்து பயணம் செய்த மேனகா (27), கல்லூரி மாணவர் நவீன்குமார் (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணேசன் கூத்தாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

மல்லசமுத்திரம் அருகே தனியார் பஸ் மோதியதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்