< Back
மாநில செய்திகள்
கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் - சேகர் பாபு
மாநில செய்திகள்

'கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்' - சேகர் பாபு

தினத்தந்தி
|
21 July 2024 9:02 PM IST

கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த முடிச்சூர் பகுதியில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகளை விரைவாக முடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலமாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரெயில் நிலைய பணிகள் முடிவடையும் என்று ரெயில்வே துறை உறுதி அளித்துள்ளது."

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்