< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிளாம்பாக்கத்தில் நடைமேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியீடு
|31 Jan 2024 9:20 AM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முதல் ரெயில் நிலையத்தின் மையப்பகுதி வரை 400மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள், சென்னை கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்தன. சென்னையின் தென்பகுதிக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் 30-ந் தேதி முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் கிளாம்பாக்கம் பஸ் முனையம் முழுமையாக செயல்பட தொடங்கிவிட்டது. இந்தநிலையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் - ரெயில் நிலையம் இடையே நடைமேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையத்தையும், ரெயில் நிலையத்தையும் இணைக்க மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடைமேம்பாலம் அமைக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மேற்கொள்ள இருக்கிறது. நடை மேம்பாலத்துடன் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி வசதியும் அமைக்கப்பட உள்ளது.