< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
|11 Feb 2024 9:18 PM IST
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை கொடுப்பது நியாயமில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை,
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்றும், அவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுப்பது நியாயமில்லை என்றும் கூறினார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போதிய வசதிகள் இல்லாமல், இணைப்புகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்கள் பாதிக்கப்படுவதை நேரடியாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும், அரசியலுக்காக இதை பேசவில்லை என்றும் தெரிவித்தார்.