< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிளாம்பாக்கம் ரெயில் நிலையப்பணி மார்ச் மாதத்தில் நிறைவடையும்: தெற்கு ரெயில்வே
|25 July 2024 2:50 PM IST
தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை,
கிளாம்பாக்கம் ரெயில் நிலையப்பணி மார்ச் மாதத்தில் நிறைவடையும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என்.சிங் கூறியதாவது,
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய புதிய கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.இந்தப் பணிகளை முடித்து தமிழக அரசு கொடுத்தவுடன் புதிய ரெயில் நிலைய கட்டும் பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரெயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும். என்றார்.