< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா
|7 Sept 2023 12:09 AM IST
ராணிப்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டையில் ராமானுஜர் அறக்கட்டளை மற்றும் வித்யா பீடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பாரதி முரளிதர சுவாமிகள் வேதமந்திரங்கள் முழங்க கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தேசமும் தெய்வீகமும் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை மற்றும் பாட்டு போட்டிகள் நடைபெற்றன. கிருஷ்ணர், ராதை வேடமணிந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.