< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பள்ளி மாணவி கடத்தல்
|3 Feb 2023 12:15 AM IST
பள்ளி மாணவி கடத்தியது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் அருண்குமார் (வயது 20). இவர் கூரியர் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் விழுப்புரம் அருகே பனங்குப்பத்தைச்சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவியை கடத்திச்சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற அருண்குமாரையும் தேடி வருகின்றனர்.