< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிளஸ்-1 மாணவி கடத்தல்: போக்சோவில் வாலிபர் கைது
|26 Feb 2024 1:35 AM IST
போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருநாதநாயக்கனூர் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 19). இவரும், பிளஸ்-1 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கருணாகரன் கடத்திச்சென்றார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியையும், கருணாகரனையும் தேடினர். அப்போது கருணாகரன், மாணவியுடன் அவரது வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்தனர். மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.