< Back
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
சூளகிரி அருகே 17 வயது சிறுமி கடத்தல்?

4 Jun 2023 12:00 PM IST
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த மாதம் 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமியின் தாயார், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், சூளகிரி அருகே தாசம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (20) என்ற வாலிபர் அந்த சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.