கள்ளக்குறிச்சி
மதுபாட்டில் கடத்திய பெண் கைது
|கச்சிராயப்பாளையம் அருகே மதுபாட்டில் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே க.அலம்பலம் கிராமத்துக்கு புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவதாக கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, பிரதாப், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் க.அலம்பலம் மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ஒரு பெண் 2 கட்டை பைகளை வைத்திருந்தார். உடனே அந்த பைகளை சோதனை செய்தபோது அதில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் சங்கராபுரம் அருகே உள்ள ஆற்காவடி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மனைவி உத்திராம்பாள்(வயது 49) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு கொடுக்க செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உத்திராம்பாளை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 210 புதுச்சேரி மாநில மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த 2 பெண்களைதேடி வருகின்றனர்.