< Back
மாநில செய்திகள்
குரும்பூரில் ஆட்டோவில் கடத்திச்சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்;சிறுவன் உள்பட மேலும் 4 பேர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

குரும்பூரில் ஆட்டோவில் கடத்திச்சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்;சிறுவன் உள்பட மேலும் 4 பேர் கைது

தினத்தந்தி
|
13 July 2023 12:15 AM IST

குரும்பூரில் ஆட்டோவில் கடத்திச்சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இளம்பெண் பலாத்காரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 8-ந் தேதி இரவு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூருக்கு பஸ்சில் வந்தார்.

அங்கிருந்து உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக குரும்பூர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பெருங்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துராம்குமார் என்ற தங்கம் (வயது 22) என்பவர் ஆட்டோவில் வந்தார். அவர் திடீரென்று அந்த இளம்பெண்ணை மிரட்டி ஆட்டோவில் கடத்திச் சென்று ஏரல் பாலத்துக்கு அருகில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆட்டோ டிரைவர் சிக்கினார்

தொடர்ந்து முத்துராம்குமாரின் கூட்டாளிகள் சிலரும் அங்கு வந்தனர். அவர்களும் அந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதுகுறித்து அந்த இளம்பெண் குரும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா விசாரணை நடத்தி நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவர் முத்துராம்குமாரை கைது செய்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், கூட்டாளிகளான குரும்பூர் நெட்டையன்காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுபாஷ் (23), சங்கர் மகன் முரளி (20), செந்தூர்பாண்டி மகன் குட்டிமுத்து (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும் 4 பேர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன் உள்பட 4 பேரையும் கைது ெசய்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ பரிசோனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்