< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
மினிவேனில் கடத்தப்பட்ட 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
|15 Jun 2023 12:15 AM IST
ஆத்தூர் அருகே மினிவேனில் கடத்தப்பட்ட 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் ஆத்தூர்-புன்னக்காயல் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு மினிவேனை மடக்கி சோதனை செய்தனர். அந்த வேனில் 16 மூட்டைகளில் மொத்தம் 640 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தியதாக வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரத்தை சேர்ந்த துரை (வயது 32), சரவணன் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 640 கிலோ ரேஷன் அரிசி, மினிவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.