வேலூர்
சிறுமியை கடத்திச்சென்ற வாலிபர் போக்சோவில் கைது
|சிறுமியை கடத்திச்சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தத்தை அடுத்த டி.டி. மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 19). இவர், குடியாத்தத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த ஜவுளிக்கடையில் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி வேலை செய்து வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அஜய்குமார் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிறுமியுடன் இருந்த அஜய்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அஜய்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுமியை வேலூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.