< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
|26 Aug 2022 11:22 PM IST
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 22), கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.