< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மாணவியை கடத்தி பாலியல் தொல்லை
|14 Sept 2023 6:00 AM IST
போடி அருகே மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 24). கொத்தனார். இவர், 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியுடன் பழகி வந்தார். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை வினோத்குமார் கடத்திச்சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வினோத்குமாரையும், மாணவியையும் போலீசார் தேடி வந்தனர். அப்போது கோவையில் இருந்த வினோத்குமார், மாணவியுடன் போடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் தன்னை வினோத்குமார் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதுடன், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமாரை கைது செய்தனர்.