< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்; 2 பேர் கைது
|29 Nov 2022 9:56 PM IST
திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் காலனியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 20). இவரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மருதுபாண்டி திருமண ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு கடத்தி சென்றார். இதற்கு அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவனும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுபாண்டி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.