< Back
மாநில செய்திகள்
வாலிபருக்கு அடி-உதை
விழுப்புரம்
மாநில செய்திகள்

வாலிபருக்கு அடி-உதை

தினத்தந்தி
|
10 Aug 2023 12:57 AM IST

மது வாங்கித்தர மறுத்த வாலிபருக்கு அடி-உதை விழுந்தது.

விழுப்புரம் அருகே உள்ள சோழம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் மனைவி கலையரசி (வயது 49). இவருடைய மகன் விஜய் (25) என்பவரும் அதே கிராமத்தை சேர்ந்த பரசுராமன், பாபு ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் பரசுராமன், பாபு ஆகிய இருவரும் விஜயிடம் சென்று மது வாங்கி கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு விஜய் வாங்கித்தர மறுத்ததால் அவரை இருவரும் சேர்ந்து திட்டி கண்ணாடி பாட்டிலால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கலையரசி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பரசுராமன், பாபு ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்