< Back
மாநில செய்திகள்
கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது

தினத்தந்தி
|
19 Jun 2023 11:50 PM IST

கலவை அருகே கியாஸ் சிலிண்டர் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல்நேத்தப்பாக்கம் திமிரி ரோட்டில் வசிப்பவர் முருகேசன். இவர் தனது வீட்டின் பின்புறம் காலி சிலிண்டரை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரோ ஒருவர் சிலிண்டரை எடுத்து செல்வதை முருகேசனின் மனைவி பார்த்துள்ளார். இதுகுறித்து முருகேசன் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் கலவை பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பழக்கடை தணிகைவேல் என்பவர் சிலிண்டரை திருடியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

மேலும் செய்திகள்