< Back
மாநில செய்திகள்
கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது
திருச்சி
மாநில செய்திகள்

கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
27 Jan 2023 1:33 AM IST

கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

திருவெறும்பூர் தாலுகா அளவிலான கியாஸ் சிலிண்டர் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ரா.அபிராமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவன கியாஸ் சிலிண்டர் முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். திருவெறும்பூர் தாலுகாவில் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைகளை களைய ஏதுவாக திருவெறும்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்