தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - கி வீரமணி
|தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தி.க. தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திராவிட கழகம் சார்பில் இன்று திருவாரூரில் சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடு நடைபெறுவதாக இருந்த நிலையில் இதில் தி.க.தலைவர் வீரமணி, திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.
இந்நிலையில் கடும் மழையின் காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தி.க. தலைவர் வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது,
ஒத்திவைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மாநாடானது அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி இதே திருவாரூரில் நடைபெறுகிறது. இதில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அனைத்து தலைவர்களும் அன்றைய தினம் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
மேலும் தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான பூண்டி கே. கலைவாணன் உள்பட பலர் உடனிருந்தனர்.