< Back
மாநில செய்திகள்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு
மாநில செய்திகள்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு

தினத்தந்தி
|
14 Aug 2024 9:23 PM IST

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை,

தேசிய மகளிர், குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குஷ்புவின் ராஜினாமாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏறுக்கொண்டதாக அறிவித்துள்ளது.

2023 பிப்ரவரி 27-ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜக பிரமுகர் குஷ்பு நியமிக்கப்பட்டார். தற்போது பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் குஷ்பு உள்ளார்.

மேலும் செய்திகள்