< Back
மாநில செய்திகள்
தியாகராயநகரில் பெண்ணிடம் நகைப்பறித்த கேரள வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

தியாகராயநகரில் பெண்ணிடம் நகைப்பறித்த கேரள வாலிபர் கைது

தினத்தந்தி
|
9 Aug 2022 2:07 AM IST

சென்னை தியாகராயநகரில் பெண்ணிடம் நகைப்பறித்த கேரள வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சென்னை தியாகராயநகர் ராஜாச்சார் தெருவை சேர்ந்தவர் காயத்ரி (வயது 45). இவர் நேற்று முன்தினம் மாலை 6.20 மணியளவில், தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்ப முயன்றனர். அப்போது காயத்ரி கூச்சலிட்டார். பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் தகவலறிந்து பாண்டிபஜார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த உமர் அலி இலியன்(19) என்பது தெரிய வந்தது. மற்றொரு நபர் 17 வயது சிறுவன் ஆவார். உமர் அலி இலியன் கைது செய்யப்பட்டார். 17 வயது சிறுவன், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

மேலும் செய்திகள்