< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கீழநம்பிபுரம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
|9 Oct 2023 12:15 AM IST
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கீழநம்பிபுரம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் சீனிவாச பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி இதர தெய்வங்களுக்கு பால், தேன், மஞ்சள், இளநீர் சீகக்காய், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை, மாவிளக்கு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.