< Back
மாநில செய்திகள்
கீழடி அகழாய்வு: கொந்தகையில் இதுவரை 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வு: கொந்தகையில் இதுவரை 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
9 July 2022 7:48 PM IST

இதுவரை நடந்த 3 கட்ட அகழாய்வுகளிலும் மொத்தம் 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் 2 கட்ட அகழாய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 3-ம் கட்ட அகழாய்வு பணி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அங்கு இதுவரை நடந்த 3 கட்ட அகழாய்வுகளிலும் மொத்தம் 134 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3-ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை திறப்பதற்கு அதைச் சுற்றி அளவு எடுக்கப்பட்டு நூல்களால் கட்டி ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்