கீழக்கரை ஜல்லிக்கட்டு- ஆன்லைன் முன்பதிவு நிறைவு
|அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
மதுரை,
ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன. கடந்த வாரம் இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயாரானது. இந்த அரங்கத்தை 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த அரங்கத்தில் திறப்பு விழாவன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற இருக்கின்றன.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியிருந்தது. இந்த நிலையில் நேற்று தொடங்கிய ஆன்லைன் முன்பதிவு இன்று நிறைவு பெற்றுள்ளது