சிவகங்கை
கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா
|காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது
காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், கல்லல் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, வர்த்தக அணி ராகோஅரசு சரவணன், கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சண்முகசுந்தரம், தாசில்தார் தங்கமணி, கவிஞர் சரஸ்வதி நாகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன், மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராமநாதன், மாவட்ட வக்கீல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சித்திக், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.