ஈரோடு
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஈரோடு-பழனி ரெயில் திட்டம் நிறைவேறுமா? பாதியில் நிற்குமா?- கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க கோரிக்கை
|மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஈரோடு-பழனி ரெயில் திட்டம் நிறைவேறுமா? பாதியில் நிற்குமா?- கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க கோரிக்கை
தமிழ் கடவுள் என தன்னிகரில்லா புகழோடு இருக்கும் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனிக்கு நாடெங்கும் ஏன் உலகமெங்கும் உள்ள பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
தன்னை வணங்கும் பக்தர்களை திரும்பி வணங்கும் முருகப்பெருமானுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் என கொங்கு மண்டலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இவர்கள் பழனி செல்ல வேண்டும் என்றால் பஸ் போக்குவரத்து மட்டுமே உள்ளது. ரெயில் போக்குவரத்து இல்லை.
இந்த நிலையில் ஈரோடு-பழனி ெரயில் பாதை திட்டம் அமைப்பதற்கான ஆய்வு பணிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் நில உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆங்கிலேயர்களால் ஆய்வு
ஈரோடு-பழனி ெரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1922-ம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணி நடைபெறவில்லை.
இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி தாராபுரத்தை சேர்ந்த லிங்கம் சின்னசாமி என்பவர் ஈரோடு - தாராபுரம்- பழனி ெரயில்வே மக்கள் பணி சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் நீண்ட வருடங்கள் தொடர்ந்து போராடினார். சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.
இப்படி பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தை நிறைவேற்ற கோரி போராடியதன் விளைவாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 10-6-2005 அன்று ெரயில்வே பட்ஜெட்டில் ஈரோடு-பழனி ெரயில் திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டது.
அப்போது இந்த திட்டத்திற்காக ஈங்கூர் ெரயில் நிலையத்திலிருந்து பழனி வரை சர்வே செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்ட சர்வே பணிகள் நடைபெற்றது.
ஆய்வு அறிக்கை
ஆனால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் விரைவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்போது காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த விடியல் சேகர் மற்றும் பழனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கார்வேந்தன் ஆகியோர் ஈரோட்டில் இருந்து கடந்த 4-2-2008 முதல் 10-2-2008 வரை 7 நாட்கள் சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் ஆகிய ஊர்கள் வழியாக பழனிக்கு 120 கி.மீ தூரம் நடை பயணம் சென்றனர்.
அதன்பின்னர் ெரயில்வே துறை மூலம் ரூ.78 லட்சத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து 2-ம் கட்ட சர்வேயும் நடைபெற்றது. அதில் சென்னிமலை, காங்கேயம், ஊதியூர், நல்லிமடம், தாராபுரம், தாசநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி வழியாக பழனி வரை 91 கி.மீ தூரத்திற்கு ஆய்வு செய்யப்பட்டது.
அதில் 6 பெரிய பாலங்கள், 42 சிறிய பாலங்கள், பல்வேறு இடங்களில் 23 ெரயில்வே கேட்டுகள் அமைக்க வேண்டி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு அதன் அறிக்கை ெரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அச்சம்
இதற்கிடையே ெரயில் பாதை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அப்போதைய சந்தை நிலவரப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மேலும் ெரயில்வே துறையில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி "ஈரோடு - பழனி ெரயில் திட்டத்தால் வாழ்க்கை இழப்போர் நலச்சங்கம்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கடந்த 20-9-2010 அன்று நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஈங்கூரில் இருந்து நடைபயணமாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஈரோடு-பழனி ெரயில் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஆய்வு பணிக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஒருபுறம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தாலும், மற்றொருபுறம் ெரயில் திட்டத்தால் நிலம், வீடுகளை இழக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரும்பாலான பொதுமக்கள் இந்த புதிய ெரயில்வே திட்டம் குறித்து கூறுகையில், இந்த திட்டம் உறுதியாக வருமா? அல்லது ஆய்வுகளோடு நிறுத்தப்படுமா? என்பதை ெரயில்வே நிர்வாகம் பொது மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இந்த திட்டம் குறித்து பல்வேறு தரப்பினர் கூறியதாவது:-