< Back
மாநில செய்திகள்
ரூ.5¼ கோடியில் காட்பாடி-வள்ளிமலை சாலை அகலப்படுத்தும் பணி
வேலூர்
மாநில செய்திகள்

ரூ.5¼ கோடியில் காட்பாடி-வள்ளிமலை சாலை அகலப்படுத்தும் பணி

தினத்தந்தி
|
9 Oct 2023 10:32 PM IST

ரூ.5¼ கோடியில் காட்பாடி-வள்ளிமலை சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளர் ஆய்வுசெய்தார்.

மாநில நெடுஞ்சாலை கோட்டத்தின் கீழ் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 900 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் சாலை அகலப்படுத்தும் பணி, சிறுபாலம் கட்டுதல், புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், காட்பாடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் காட்பாடி-வள்ளிமலை சாலை 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5 கோடியே 23 லட்சத்தில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சாலைகளின் தரம் குறித்து வேலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன் நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளர் குமரேசன், தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் அசோக்குமார், பூபதிராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்