புயல் சின்னம் காரணமாக காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
|புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காசிமேடு,
புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 738-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் 12 விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்பவும், 40 விசைப்படகுகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுகத்துக்கு செல்லவும் மீனவர்களுக்கு மீன் வளத்துறையினர் அறிவுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக கடலில் இருந்து நூற்றுக்கணக்கான பைபர் படகுகளை ராட்சத கிரேன் மூலம் தூக்கிச்சென்று பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் பத்திரமாக வைத்துள்ளனர்.