< Back
மாநில செய்திகள்
காசிக்கும், தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் இணைப்பு உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

'காசிக்கும், தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் இணைப்பு உள்ளது' - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
2 Dec 2023 9:19 PM IST

மார்கழி மாதத்தின் திருவிழாக்களில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் இணைந்துள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் 2.0 பயணம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி மற்றும் கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் செயல்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, மார்கழி மாதத்தின் திருவிழாக்களில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் இணைந்துள்ளது என்றார். காசிக்கும், தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் இணைப்பு உள்ளதாக தெரிவித்த அவர், இவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் காணாமல் போனதாகவும், அவற்றை மீட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்