< Back
மாநில செய்திகள்
கரூர்: ஸ்கூட்டியில் தஞ்சமடைந்த பாம்பை போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்
மாநில செய்திகள்

கரூர்: ஸ்கூட்டியில் தஞ்சமடைந்த பாம்பை போராடி பிடித்த தீயணைப்பு துறையினர்

தினத்தந்தி
|
23 July 2022 7:40 PM IST

கரூரில் ஸ்கூட்டியில் தஞ்சமடைந்த பாம்பை தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ஸ்கூட்டியின் எஞ்சின் பகுதியில் சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று தஞ்சமடைந்தது.

இதையடுத்து ஸ்கூட்டியில் இருந்து பாம்பை வெளியேற்ற ரமேஷும், அங்கிருந்தவர்களும் கைகளில் கிடைத்த பொருட்களை கொண்டு முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் பாம்பை வெளியேற்ற முடியவில்லை.

இதையடுத்து இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர்.

மேலும் செய்திகள்