< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
டேக்வாண்டோ போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை
|21 Feb 2023 12:00 AM IST
டேக்வாண்டோ போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், மாணவி சினேகா தங்கப்பதக்கமும், மாணவர்கள் தமிழ்செல்வன், சுபாஷ் ஆகியோர் தங்கப்பதக்கமும், மாணவர்கள் கவின்குமார், பாலகணேஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர், அனைத்து பேராசிரியர்கள், சகமாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.