< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஹேண்ட்பால் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை
|23 Jan 2023 12:00 AM IST
ஹேண்ட்பால் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்குட்பட்ட ஹேண்ட்பால் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு நாக்-அவுட் முறையில் விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று விளையாடி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். இதனையடுத்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து வருகின்றனர். உள்ளிட்ட ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.