< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கரூர் மாணவி சாதனை
|2 Aug 2022 12:24 AM IST
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கரூர் மாணவி சாதனை படைத்துள்ளார்.
முதலாவது தமிழ்நாடு மாநில அளவிலான கியோருகி மற்றும் பூம்சே சாம்பியன் ஷிப் போட்டி (டேக்வாண்டடோ) தர்மபுரியில் கடந்த 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி தீர்த்தி பிரவீன் (வயது 8) கலந்து கொண்டார். இதில் மாணவி தீர்த்தி பிரவீன் சப்-ஜூனியர் பிரிவில் கியோருகியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.