கரூர்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு
|கரூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய முதல்வராக சீனிவாசன் பொறுப்பேற்றார்.
புதிய முதல்வர் பொறுப்பேற்பு
கரூர்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ஏற்கனவே பணியாற்றி வந்த முத்துச்செல்வன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பேட்டி
பின்னர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அனைத்து மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுடன் கனிவுடனும், பொறுமையுடனும் நடந்து கொண்டு மருத்துவ சேவை ஆற்றிட வேண்டும். மேலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று மனநிறைவுடன் மருத்துவ வசதியை பெற்று, குணம் பெற்று திரும்ப செல்ல அனைவரும் ஒன்று சேர்ந்து நமது கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் அரசுக்கும் நல்ல பெயரை ஏற்படுத்தி தந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.