< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவிகள் தேர்வு
கரூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவிகள் தேர்வு

தினத்தந்தி
|
2 Sept 2023 12:25 AM IST

மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.

தமிழ்நாடு கோ-கோ சங்கம் அனுமதியுடன், தேனி மாவட்டத்தில் சீனியர் பெண்களுக்கான மாநில அளவிலான கோகோ போட்டி நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் ஆதிஸ்வரி, யுவஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மாணவிகளை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர், சகமாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்