< Back
மாநில செய்திகள்
கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான பணிகள் தீவிரம்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
18 May 2023 6:32 PM GMT

கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பணிகள் தீவிரம்

மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே 26 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்ததன் அடிப்படையில் வருகின்ற கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்க உள்ளது.

பயிற்சி அளிக்கப்படும்

இந்த பள்ளி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெற உள்ளது. இப்பள்ளியில் 400 மாணவர்களும், 400 மாணவிகளும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்பட உள்ளது. இப்பள்ளியில் 19 முதுகலை ஆசிரியர்களும், 10 பட்டதாரி ஆசிரியர்களும் பணிபுரிந்து பாடங்களை நடத்த உள்ளனர். அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை தவிர உயர்கல்வி படிப்பதற்கான போட்டி தேர்வுகள் எழுதுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இப்பள்ளியை நடத்த உள்ளது. அதற்காக மாயனூர் ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்தில் கரூர் அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்