< Back
மாநில செய்திகள்
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு

தினத்தந்தி
|
25 Dec 2022 12:34 AM IST

கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

பெரியார் நினைவு தினம்

பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் திருமாநிலையூரில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் தலைமையில் தி.மு.க.வினர் பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், எம்.எல்.ஏ.க்கள். மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, மண்டல குழு பொறுப்பாளர்கள் கோல்ட் ஸ்பாட் ராஜா, அன்பரசன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

இதேபோல், திராவிடர் கழகம் சார்பில், மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நொய்யல்

நொய்யல், குறுக்குச்சாலை, சேமங்கி, கோம்புப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், குறுக்கு பாளையம், புகழூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் தஞ்சை மோகன் தலைமையில் பெரியாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்