< Back
மாநில செய்திகள்
கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரத்ததான முகாம்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரத்ததான முகாம்

தினத்தந்தி
|
22 Sept 2023 12:42 AM IST

கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில், நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கரூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தீனசேனன் தலைமை தாங்கினார். இதில் கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் ரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான ராமலிங்கம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். முகாமில் 73 பேர் ரத்த தானம் வழங்கினர். பின்னர் மாநில துணை தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், அகில இந்தியாவில் பெரிய கட்சி பா.ஜ.க., தமிழகத்தில் பெரிய கட்சி அ.தி.மு.க. தான். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. விரைவில் தேர்தல் கூட்டணி குறித்து மாநில தலைமையின் ஆலோசனைப்படி, தேசிய தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும். இருகட்சிக்கும் இருக்கும் ஒரே நோக்கம் தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது, என்றார்.

மேலும் செய்திகள்