< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கரூர் : மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு
|15 Feb 2023 2:29 PM IST
மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்,
புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் விளையாட்டு போட்டியை முடித்து விட்டு புதுக்கோட்டைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவனையை சுற்றிப்பார்க்க இறங்கியுள்ளனர். அப்போது அதில் சில மாணவிகள் ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போது அதில் ஒரு மாணவி ஆற்றில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். அதை பார்த்த மற்ற மாணவிகள் 3 பேர் அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் நீரில் மூழ்கி மாயமாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைபுத்துறையினர் விரைந்து வந்து மாணவிகளை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நீரில் மூழ்கிய 4 மாணவிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.